உள்ளூர் செய்திகள்

தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழி ஏற்றபோது எடுத்தபடம். அருகில் சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.

சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழா

Published On 2023-06-12 14:24 IST   |   Update On 2023-06-12 14:24:00 IST
  • பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் முன்னிலையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

முதல்-அமைச்சர் உத்தரவின் படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் முதல் ஓராண்டு காலமாக ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வாரங்களில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனம், வியாபாரிகள், சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் போன்றவர்களை பெரும் அளவில் மக்கள் இயக்கமாக பங்கேற்க செய்து இதன் மூலம் நகரின் பொது இடங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலையில், தன்னார்வ லர்களுக்கு குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் மூலம் நகரின் பெரும் பகுதிகளில் பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நகரின் பொது இடங்களில் பெருமளவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அப்புறபடு த்தப்பட்டது. மகளிர்குழுக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் முன்னிலையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை வீடு வீடாக அழைத்து சென்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்குவது குறித்து ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சேர்மன் உமா மகேஸ்வரி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. மேற்கண்ட பணிகளை நகராட்சி ஆணையர் சபா நாயகம் தலைமையில் சுகா தார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வா ளர்கள் மாரிசாமி, வெங்கட ராமன், மாரிமுத்து மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணி யாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News