உள்ளூர் செய்திகள்
நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு: நொச்சிப்பட்டி பகுதியில் சாலை மறியல்
- நொச்சிப்பட்டி -கல்லாவி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, நொச்சிப்பட்டி கிராமத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில், முறைகேடு நடப்பதை கண்டித்தும்முறையான வேலை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நொச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பகுதி பெண்கள் நொச்சிப்பட்டி -கல்லாவி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து .தகவலறிந்து வந்த, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.