உள்ளூர் செய்திகள்

மீனவர்களுக்கு ரூ.1½ கோடி கடன் உதவி

Published On 2022-09-13 15:45 IST   |   Update On 2022-09-13 15:45:00 IST
  • பழவேற்காடு பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
  • மகளிர் வேளாண் நிலம் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம் மீன்பிடி வலைகள், படகுகள் உள்ளிட்டவை வாங்க இளைஞர்களுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

பழவேற்காடு பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. ஆதிதிராவிடர் பழங்குடியின மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தாட்கோ மூலம் சுய வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாட்டு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு பொருளாதார வளர்ச்சி திட்டம், மகளிர் வேளாண் நிலம் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம் மீன்பிடி வலைகள், படகுகள் உள்ளிட்டவை வாங்க இளைஞர்களுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது

சிறப்பு அழைப்பாளராக தாட்கோ சேர்மன் மதிவாணன், டி.ஜே.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, மாவட்ட மேலாளர் இந்திரா, உதவியாளர் பிரபுஅருள்வேல்ஸ், சேர்மன் ரவி, நகரத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் கவுன்சிலர் தமின்சா தலைவர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News