உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டிகாய்கறிகள் விலை ஏறுமுகம்

Published On 2023-01-12 14:49 IST   |   Update On 2023-01-12 14:49:00 IST
  • பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அதன் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
  • பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் வெளியூரில் இருந்து உருளை, கத்தரி, பீட்ரூட், கேரட் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகளவில் லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.

தென்காசி:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அதன் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் வெளியூரில் இருந்து உருளை, கத்தரி, பீட்ரூட், கேரட் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகளவில் லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.

கத்தரிக்காய் கிலோ ரூ.60-ல் இருந்து 130 வரையிலும், தக்காளி ரூ.22-ல் இருந்து 28 ஆகவும், வெண்டை-66, புடலை-30,பீர்க்கு-50, பாகல்-40, சுரைக்காய்-10, தடியங்காய்-16, பூசணி-14, டிஸ்கோ பூசணி-24, அவரை-52, கொத்தவரை-30, மிளகாய்-44, முள்ளங்கி-30, முருங்கைக்காய்-180, தேங்காய்-32, வாழைக்காய்-40, வாழைஇலை-15, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-32/26, இஞ்சி-60, மாங்காய்-80, மல்லிஇலை-45, கோவைக்காய்-32, சேனைக்கிழங்கு-25,சேம்பு-60, கருணைகிழங்கு-25, உருளைக்கிழங்கு-30,கேரட்-48, பீட்ரூட்-36, முட்டைக்கோஸ்-20, சவ்சவ்-24, பீன்ஸ்-48, பச்சைப்பட்டாணி-48, குடமிளகாய்-64, காலிப்ளவர்-40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும் இதே விலைகள் நீடிக்கிறது. காய்கறிகளின் விலை ஏறுமுகமாக இருந்தாலும் சிறு சிறு வியாபாரிகள் விற்பனை செய்வதற்காக ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

20 எண்ணிக்கை கொண்டபனங்கிழங்கு கட்டுகள் ரூ.100-க்கும், கரும்புக்கட்டுகள் ரூ. 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News