உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு கால்வாயில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Published On 2023-03-15 10:33 GMT   |   Update On 2023-03-15 10:33 GMT
  • இதுவரை சாக்கடை கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது.
  • தற்போது வைரஸ் நோய் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் நடைப்பெற்றது.

5 நாட்கள் நடைப்பெற்ற இத்திருவிழாவில் லட்சகனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடனாக பால்குடம், எடுத்தும், கிடா, கோழி பலியிட்டும் நேர்த்திகடனை செலுத்தினர்.

அம்மனுக்கு ஊற்றிய பால் கோவில் வளாகத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் கலந்து தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது, மேலும் சாக்கடை கால்வாயில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் குப்பைகள் நிறைந்து சாக்கடை நீர் செல்லாமல் தேங்கி உள்ளதால் புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கோவில் வளாகத்திற்குள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இது குறித்து கோயில் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை சாக்கடை கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது.

தற்போது வைரஸ் நோய் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சாக்கடை கால்வாயால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News