உள்ளூர் செய்திகள்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு தருமபுரி கோட்டை மல்லிகார்ஜுன சாமி கோவிலில் சாமி திருவீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.

சனி பிரதோஷத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-07-16 15:23 IST   |   Update On 2023-07-16 15:23:00 IST
  • அலங்கரிக்க ப்பட்ட உற்சவ மூர்த்தியை பக்தர்கள் தலையில் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
  • மேலும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஆனி மாத 2-வது சனி பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.

தொப்பூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான லிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை 4 மணி அளவில் அபிஷேகமும், 6 மணி அளவில் தீபாரதனையும் நடந்தது.

இதில் ஸ்ரீ ஞானலிங் கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.

மேல் பூரிக்கல் கிராமத்தில் தியானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 32 அடி உயரம் தியானேஸ்வரர் சிலையும் கைலாசநாதர் கோவிலும் அமைந்துள்ளது.

இவ்விரு திருத்தலங் களிலும் நேற்று மாலை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ் வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வரசாமி ஆலயம், காமராஜ் காலனியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், ராம்நகரில் உள்ள சொர்ணாம் பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கும் பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர், குங்குமம் மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

பின்னர், சிவன், நந்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப் பட்டன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தியை பக்தர்கள் தலையில் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்தனர். மேலும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

Tags:    

Similar News