உள்ளூர் செய்திகள்

பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

சதயவிழாவை யொட்டி தஞ்சை பெரிய கோவிலில் பந்தல் அமைக்கும் பணி மும்முரம்

Published On 2023-10-16 10:29 GMT   |   Update On 2023-10-16 10:29 GMT
  • இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.
  • 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தஞ்சாவூர்:

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜன் சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சதய நாளான 25ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

சதய விழாவை ஒட்டி பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து விழா மேடையும் அமைக்கப்படும்.

Tags:    

Similar News