உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

ஆவணி மாத கடைசி முகூர்த்தம் பழனி கோவிலில் களைகட்டிய திருமணங்கள்

Published On 2023-09-17 13:05 IST   |   Update On 2023-09-17 13:05:00 IST
  • இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் தமிழகம் முழுவதும் திருமணங்கள், காதணி விழாக்கள் களை கட்டி காணப்பட்டது.
  • திருஆவினன்குடி கோவிலில் திருமணம் செய்து கொண்டவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பழனி:

தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டா டப்பட்டு வருகிறது. மேலும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடி வருகின்றனர்.

இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் தமிழகம் முழுவதும் திருமணங்கள், காதணி விழாக்கள் களை கட்டி காணப்பட்டது. இதனால் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

பழனியில் நேற்று மாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் கூடினர். ஆவணி மாத முகூர்த்தம் என்பதால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றது. திருஆவினன்குடி ேகாவிலில் திருமணம் செய்து கொண்டவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானை ப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர். ஒரே நேரத்தில் அதிக அளவு பக்தர்கள் வந்ததால் அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் களைகட்டிய திருமணங்களால் முக்கிய கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சித்திவிநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பல திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

Tags:    

Similar News