உள்ளூர் செய்திகள்

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்.

ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சிகள்

Published On 2022-07-06 14:53 IST   |   Update On 2022-07-06 14:53:00 IST
  • இயற்கை விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
  • இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் விதமாக ஏக்டேருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தென்திருப்பேரை:

ஆழ்வார் திருநகரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இயற்கை விவசாயத்தை பற்றியும் அதன் பயன்களை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் தென்திருப்பேரையில் நடைபெற்றது.

இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் விதமாக ஏக்டேருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை அல்லது ரூ.5,000 மதிப்புள்ள இடுபொருள்கள் வழங்கப்படும். பயிற்சியினை தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது ஆசிப், தோட்டக்கலை அலுவலர் கௌரிசங்கர், மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் யுவராஜ் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் இத்திட்டத்தினை பற்றி முழு விவரங்களுக்கு ஆழ்வார் திருநகரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயனடையலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News