உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக உழவர் சந்தை விவசாய விற்பனையாளர்களுக்கு பயிற்சி

Published On 2022-07-30 09:50 GMT   |   Update On 2022-07-30 09:50 GMT
  • உணவு பாதுகாப்பு துறைசார்பாக சுத்தம், சுகாதாரம் மற்றும் தரம் குறித்து அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
  • இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து பெற்றிட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்பபடும் காயகறிகள் மற்றும் பழங்கள் தரமானதாக, சுகாதாரமாக நுகர்வோர்க்கு சென்றயடையவும் உழவர் சந்தை மேம்படுத்திடவும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் வேளாண்மை துறை நடவடிக்கைள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் முதற்கட்டமாக உழவர் சந்தைக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான உழவர் சந்தை சான்றிதழ் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து பெற்றிட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

உழவர் சந்தை விவசாய விற்பனை உறுப்பினர்களுக்கு , மதிகோண்பாளையத்தில் உள்ள வேளாண்மை ஓழுங்கு முறை விற்பனைகூட மண்டல அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு துறைசார்பாக சுத்தம், சுகாதாரம் மற்றும் தரம் குறித்து அடிப்படை பயிற்சி நடைபெற்றது. காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்புரையாற்றினார்.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோ முன்னிலையில் வேளாண்மை துறை துணை இயக்குநர் கணேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா பேசும்போது சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல், காய்கறி, பழங்கள் கையாளுதல், பராமரித்தல், பொருள்கள் இருப்பு வைத்தல், கழிவுகள் அப்புறப்படுத்தல் குறித்து அறிந்து கொள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. நன்கு உள்வாங்கி செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒழுங்குமுறை வேளாண்மை செயலாளர் ரவி மற்றும் முனிராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உரையாற்றினர். உழவர் சந்தை விற்பனையாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் நன்றி தெரிவித்தார். 

Tags:    

Similar News