மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
- பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது.
- இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அடுத்த இளங்கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னமலை ( வயது 80). இவர் கடந்த 4-ம் தேதி பெரியகளம் என்ற பகுதியில் சாலையைக் கடக்க முற்படும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பொன்னமலை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னமலையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற அந்த மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த 13-ம் தேதி வீடு திரும்பிய பொன்னமலை இன்று காலை வீட்டில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.