உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
- திண்டுக்கல் அருகே வீட்டில் பால்காய்ச்சும் போது எதிர்பாராதவிதமாக ஆடையில் தீப்பிடித்தது
- காப்பாற்ற சென்றவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிசிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகில் உள்ள செட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுரைவீரன். இவரது மனைவி பொன்னம்மாள்(70). இவரது பேத்தி ஜம்புளியம்பட்டியில் புதிய வீடு கட்டி அதற்கான பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்ட பொன்னம்மாள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கில் இருந்து தீ அவரது சேலையில் பிடித்தது. இதை பார்த்ததும் அவர் அலறியடித்து கூச்சலிட்டார். இதனால் அருகில் இருந்த அவரது பேத்தியின் கணவரான ஜெயராமன் என்பவர் காப்பாற்ற முயன்றார்.
இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.