உள்ளூர் செய்திகள்

கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் அழித்த போது எடுத்த படம்.

பாளை, மேலப்பாளையத்தில் மீன் விற்பனை கடைகளில் அதிகாரிகள் 'திடீர்' ஆய்வு- 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

Published On 2023-10-26 09:11 GMT   |   Update On 2023-10-26 09:11 GMT
  • சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • நெல்லை மாவட்டத்தில் அனைத்து மீன் கடைகளிலும் சோதனைகள் நடத்தப்படும்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பாளை மற்றும் மேலப்பா ளையம் மண்டலங்களில் மீன் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாது காப்பு துறையும், மீன்வளத் துறையும் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, மீன்வளத் துறை உதவி இயக்குனர் புஷ்ரா சப்னம் ஆகியோர் ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் சங்கரலிங்கம், ராம சுப்பிரமணியன், மீன்வளத் துறை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் பாலு குமார் ஆகியோர் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் பதன பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள, 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்து அழிக்கப் பட்டது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாநகரின் ஒவ்வொரு பகுதி யிலும் இத்தகைய சோதனை கள் நடத்தப்படும் என்றும், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் கடை களிலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.

Tags:    

Similar News