மக்காளச்சோள அறுவடையை ஆய்வு செய்த அதிகாரிகள்.
மக்காளச்சோள பயிர்கள் அறுவடையை அதிகாரிகள் ஆய்வு
- மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் கிருஷ்ணசாமி என்ற விவசாயி முதல் இடத்தை பிடித்தார்.
- 50 சதவிகித மானியத்தில் பண்ணை கருவிகளை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு வட்டார பகுதியில் வேளாண்மை துறை மூலம் நடைபெற்ற மாவட்ட விவசாயிகளுக்கான மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் சவலாப்பேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயி கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்காச்சோளப் பயிர்கள் அறுவடையை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜென்கின்பிரபாகர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார்அம்மாள், கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் மற்றும் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கயத்தார் வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் கடப்பாரை, மண்சட்டி, கலை கொத்தி, பண்ணருவாள், மண்வெட்டி ஆகிய பண்ணை கருவிகளை விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயனடைய வேண்டி வேளாண்மை உதவி இயக்குனர்சுரேஷ் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.