உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் விரட்டி பிடித்தனர்: லாரியில் கடத்திய 9 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-07-14 06:27 GMT   |   Update On 2023-07-14 06:27 GMT
  • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
  • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News