சாலையில் போர் போடப்படும் காட்சி.
சாலையை ஆக்கிரமித்து போடப்பட்ட போர்வெல் பணியை தடுத்து நிறுத்திய பேரூராட்சி ஊழியர்கள்
- சாலையை ஆக்கிரமித்து போர் போடுவதாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது.
- இவர்கள் அனுமதி வாங்கவில்லை.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கோவிந்த செட்டி தெருவில் பக்கம் ஒரு சந்து உள்ளது. அந்த சந்தில் நேற்று காலை சாலையை ஆக்கிரமித்து போர் போடுவதாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த பேரூராட்சி ஊழியர்கள் சாலையை ஆக்கிரமித்து போர் போடு வதை பார்த்து உடனடியாக நிறுத்துமாறு தெரிவித்தனர்.
மேலும் அங்கு போர் போடுவதற்கு அமைத்திருந்த பைப்புகள், டிரில் பிட், சுத்தியல், கடப்பாரை, உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது காவேரிப்பட்டணம் பேரூராட்சி எல்ட்பலைக் குட்ட பகுதிகளில் போர் அமைக்க பேரூராட்சி அனுமதி வாங்க வேண்டும்.
இவர்கள் அனுமதி வாங்கவில்லை. இதனால் போர் போட்டவர்கள் மீதும் போர் அமைக்க வந்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.