உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து பெட்டகத்தினை குழந்தைகளின் தாய்மார்களுக்கு கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

தேனியில் 553 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்!

Update: 2023-03-28 05:17 GMT
  • பேரீட்சம் பழம் -1 கிலோ, நெய் -1/2 கிலோ, அமினோ அமிலம் ,விட்டமின் திரவம் -600 மி.லி, புரோட்டீன் பவுடர் -1 கிலோ, குடற்புழு நீக்கமாத்திரை-1, அளவுக் கோப்பை-1, துண்டு -1 ஆகிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
  • தேனி மாவட்டத்தில் மார்ச்-20 முதல் ஏப்ரல்-03 வரை போஷன் பக்வாடா இருவார ஊட்டச்சத்து நிகழ்வு நடைபெற்று வரு கிறது.

தேனி:

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் , ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தி ன்கீழ் கலெக்டர் ஷஜீவனா ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவினை வழங்கி தொட ங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 0 மாதம் முதல் 6 மாதம் வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க ளுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் 249 பயனாளிகளுக்கும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை உள்ள மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டகம் வீதம் 304 பயனாளிகளுக்கும் மொத்தம் 553 பயனாளி களுக்கு, ரூ.2,000- மதிப்புள்ள 802 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.

ஊட்டச்சத்து பெட்டக ங்களில் பேரீட்சம் பழம் -1 கிலோ, நெய் -1/2 கிலோ, அமினோ அமிலம் ,விட்டமின் திரவம் -600 மி.லி, புரோட்டீன் பவுடர் -1 கிலோ, குடற்புழு நீக்கமாத்திரை-1, அளவுக் கோப்பை-1, துண்டு -1 ஆகிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1086 குழந்தைகளுக்கு சிறப்பு உணவு சுருவுகு வழங்கப்பட வுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவிக்க ப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் மார்ச்-20 முதல் ஏப்ரல்-03 வரை போஷன் பக்வாடா இருவார ஊட்டச்சத்து நிகழ்வு நடைபெற்று வரு கிறது.

தேனி மாவட்டத்தில் சிறுதானியங்களை மைய மாகக் கொண்டு, அனைத்து வயதினருக்கும் சிறுதானி யங்களை முன்னிலை ப்படுத்துதல் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பணிகளை அனைத்துத்துறை அலு வலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News