உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்- ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி உருவாக்கப்பட்டு 44-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், கார்த்தி, ராஜராஜன், அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.