உள்ளூர் செய்திகள்

அனுமதி இன்றி இயங்கிய நர்சிங் கல்லூரிக்கு சீல் வைப்பு

Published On 2022-10-15 10:11 GMT   |   Update On 2022-10-15 10:11 GMT
  • கல்லூரியில் சரிவர பாடம் நடத்துவதில்லை.
  • ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் ஜெப கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர்.

சேலம்:

சேலம் 5 ரோட்டில் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரி செயல்பட்டு வந்தது. இங்கு படித்த திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த 7 மாணவிகள், கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில், கல்லூரியில் சரிவர பாடம் நடத்துவதில்லை. ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் ஜெப கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர். தவறினால் ரூ.200 அபராதம் செலுத்த நெருக்கடி தருகின்றனர். எனவே இந்த கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாததால் சான்றிதழ்களை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதே நேரம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் கல்லூரி முன் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மேற்கு தாசில்தார் தமிழரசி தலை மையில் ஆர். ஐ கோமதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கல்லூரி யில் விசாரணை நடத்தினார்.

அப்போது எந்த ஆவண மும் இல்லாமலும் முறையாக அனுமதி பெறாமலும் அந்த கல்லூரி செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரியில் பயின்று வந்த 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டனர். அதில் 18 வயதுக்கு உட்பட்ட 15 பேர், சைல்ட் லைன் அமைப்பில் தங்க வைக்கப்பட்டனர். இதர மாணவிகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்பு மாலையில் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கல்லூரி மீது சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News