சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நர்சுகள்.
பணி வழங்க கோரி சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நர்சுகள் காத்திருப்பு போராட்டம்
- கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் 31 மாதங்கள் பணிபுரிந்து வந்தனர்.
- நேற்றுடன் அவர்களை எந்த முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்து உள்ளனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் 31 மாதங்கள் பணிபுரிந்து வந்தனர். நேற்றுடன் அவர்களை எந்த முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்து உள்ளனர்.ஒப்பந்த காலத்தில் 6 மாத காலம் ஊதியம் வழங்காமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும்.முறையாக எம்.ஆர்.பி தகுதி தேர்வின் அடிப்படையில் பணியமர்த்திய ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து டவுன் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ரோட்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் . இல்லை யென்றால் உங்களை கைது செய்வோம் என போலீசார் தெரி வித்தனர். எங்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும் வரை இந்தப் போராட்ட த்தில் ஈடுபடுவோம் செவிலிய ர்கள் கூறினார்கள். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.