உள்ளூர் செய்திகள்

ஊட்டி அருகே சாலைவசதியின்றி தவிக்கும் நொண்டிமேடு மக்கள்

Published On 2022-10-13 14:38 IST   |   Update On 2022-10-13 14:38:00 IST
  • குடிநீர் குழாய்கள் என அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
  • சாலை மிகவும் மோசமாக உள்ளதால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சிக்கு ட்பட்ட 36 வார்டுகளில் பல ஆண்டுகளாக எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் கழிவு நீர் கால்வாய், நடைபாதைகள், தெரு விளக்குகள் மற்றும் சாலைகள், குடிநீர் குழாய்கள் என அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு நொண்டிமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசல் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பலமுறை சாலையை சீர்படுத்தி தர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை.

இதனிடையே அப்பகுதியில் அவசர தேவைக்காக நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் சாலை இல்லாமல், அதன் ஓட்டுநர் மிகுந்த சிரமத்தில் ஆபத்தான முறையில் நோயாளியை அழைத்து சென்றார்.

ஆகவே ஊட்டி நகராட்சி நிர்வாகம் ெநாண்டிமேடு சாலையை உடனே சீர்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News