உள்ளூர் செய்திகள்

அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை கிடையாது- போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Published On 2023-04-18 06:30 GMT   |   Update On 2023-04-18 06:30 GMT
  • அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது.
  • ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை:

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News