உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அணுசக்திதுறை சார்பில் "நிலா" கமிட்டி ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-21 13:00 IST   |   Update On 2023-10-21 13:00:00 IST
  • கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்த 35பேரை வரவழைத்து கமிட்டி குழுவினருடன் அமர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து பேசினார்.
  • மாவட்ட நிர்வாகம் சார்பில் இதை பரிசீலனை செய்வார்கள் என கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தை சுற்றி 5கி.மீ தூரத்தில் கட்டிடம் கட்டவோ, விவசாய நிலத்தை வீட்டு மனையாக்கி விற்கவோ அணுசக்தி துறையின் "நிலா" கமிட்டி அனுமதி வழங்குவதில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் நிலங்களை விற்க முடியாமலும், வாங்க முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொது மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திருக்கழுகுன்றம் தாசில்தார், உள்ளிட்டோரிடம் முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில் "நிலா" கமிட்டியில் அணுசக்திதுறை சார்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன், அப்பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்த 35பேரை வரவழைத்து கமிட்டி குழுவினருடன் அமர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து பேசினார். இதில் அணுசக்திதுறையால் மக்களின் குடியிருப்பு பயன்பாட்டிற்கு எந்த தடையும் கிடையாது, வணிக பயன்பாட்டிற்கு தற்போது அனுமதி கிடையாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதை பரிசீலனை செய்வார்கள் என கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News