உள்ளூர் செய்திகள்

உயிரியல் உள்பட 10 பாடங்களுக்கு நாளை மாறுநாள் பரீட்சை

Published On 2023-03-22 15:20 IST   |   Update On 2023-03-22 15:20:00 IST
  • தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • அடுத்த மாதம் 5-ந்தேதி யுடன் தேர்வு நிறைவடைகிறது.

சேலம்:

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 5-ந்தேதி யுடன் தேர்வு நிறைவடைகிறது. சேலம் மாவட்டத்தில் 156 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகிறது.

இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 7 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு மையங்களில் 16,706 மாணவர்கள், 19,437 மாணவிகள் என மொத்தம் 36,143 தேர்வர்கள் பிளஸ்-1 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர். கடந்த 14-ந்தேதி மொழித் தேர்வு, 16-ந்தேதி ஆங்கிலம் தேர்வு, 20-ந்தேதி அன்று இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.

நாளை மறுநாள் 10 பாடங்களுக்கு தேர்வு இதையடுத்து தொடர்ந்து 21-ந்தேதி முதல் நாளை (23-ந்தேதி) வரை என 3 நாட்கள் தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் உள்ளிட்ட 10 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

Tags:    

Similar News