உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தது.

மாயம் பெருமாள்கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-09-15 15:45 IST   |   Update On 2023-09-15 16:08:00 IST
  • மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
  • கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அருள்மிகு ஸ்ரீ மாயம் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கொன்றைக்காடு கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மாயம் பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு திங்கட்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல், மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் கால யாக பூஜை, ரக்ஷா பந்தனம், கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், பூர்ணா குதி தீபாராதனை நடைபெற்று.

மங்கல இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்கினர்.

வானத்தில் கருடன் வட்டமிடும் போது கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்தை காண கொன்றைக்காடு, திருப்பூரணிக்காடு, தென்னங்குடி, காலகம், ஆணைக்காடு, கள்ளங்காடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News