உள்ளூர் செய்திகள்

புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

Published On 2023-01-01 15:19 IST   |   Update On 2023-01-01 15:19:00 IST
  • கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
  • கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

திருவாரூர்:

திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.

சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.

Tags:    

Similar News