உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய டிராக்டர்.

காமாட்சிபுரம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு புதிய டிராக்டர்

Published On 2023-08-12 13:53 IST   |   Update On 2023-08-12 13:53:00 IST
  • சிறுகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மன்றத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைசெலுத்தி உழவு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

சின்னமனூர்:

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சிக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்துவிடவும் ரூ.9.75 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டரை வழங்கினார். சிறுகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மன்றத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைசெலுத்தி உழவு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதே போல ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அப்பள்ளியில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க சென்ற மாணவி சிவசக்திக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ அறிவித்தார்.

இதில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் நிவேதா அண்ணாதுரை, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து, தேனி மாவட்ட விவசாய தொழிலாளர்அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல நிர்வாகிகளும், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News