உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை ஜல்லிகள் பெயர்ந்து சிதறி கிடக்கும் காட்சி.

பண்ருட்டியில் அவலம் 2 வாரத்தில் பெயர்ந்து போன புதிய தார் சாலை

Published On 2023-01-25 09:56 GMT   |   Update On 2023-01-25 09:56 GMT
  • கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
  • பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது.

கடலூர்:

பண்ருட்டி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி முதல் பனிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லுாரி வரையில் பைபாஸ் பகுதியில் வராததால்அப்பகுதிக்கு தனியாக தேசிய நெடுஞ்சாலை நகாய் பிரிவின் சார்பில் தனியாக ஒப்பந்த பணி கோரப்பட்டு பணிகள் துவங்கியது. இப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலைகள் தரமில்லாமலும், ஒரே நீள,அகலத்தில் போட ப்படவில்லை. மாறாக பள்ளமும், மேடுமாகவும், பழைய தார்சாலை அளவில் பாதியளவே பல இடங்களில் தார் சாலைபோடப்பட்டுள்ளன.

அரைகுறையாக போடப்பட்ட தார்சாலையும் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது. தரமற்ற சாலைகள் போட்ட தேசிய நெடு ஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சி யினர், வியாபாரிகள் போரா ட்டம் நடத்திட தயாராகி வருகின்றனர். இதனால் தரமற்ற சாலையை சீரமைத்து, சீராக சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News