உள்ளூர் செய்திகள்

நியாய விலை கடையை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் உள்ளனர்.

நாகையில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம்

Published On 2023-04-06 14:36 IST   |   Update On 2023-04-06 15:04:00 IST
  • நாகப்பட்டினத்தில் நியாய விலைக் கடையை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
  • தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் பெருங்க டம்பனூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு, மாவட்ட கலெக்டர்.

அருண் தம்புராஜ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.

இதில், ஒன்றிய குழு தலைவர் அனுசியா, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News