உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அரசு பள்ளியில் புதிதாக என்.சி.சி மாணவர்கள் தேர்வு

Published On 2022-07-07 13:46 IST   |   Update On 2022-07-07 13:46:00 IST
  • குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பன் தலைமையில் நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 25 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பன் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு 15-வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் அனில்வர்மா, நிர்வாக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி உத்திரவின் பேரில், சுபேதார் மேஜர் செந்தில்குமார், கம்பெனி ஹவில்தார் மேஜர் அப்துல் காதர் பங்கேற்று, 32 மாணவர்களை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி செய்திருந்தார்.

இதில் மாணவர்களுக்கு ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தடகள போட்டி, ரிலே, உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நகர தி.மு.க. செயலாளர் செல்வம் பங்கேற்று தேர்வான மாணவர்களை பாராட்டி, அறிவுரை கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 25 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.  

Tags:    

Similar News