உள்ளூர் செய்திகள்

வீடற்றோர் தங்கும் இல்லத்தில் தங்கி உள்ளவர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கலந்துரையாடினார்.

வீடற்றோர் தங்கும் இல்லத்தில் புதிய கட்டிடம்- மேயர் பேச்சு

Published On 2022-10-10 09:32 GMT   |   Update On 2022-10-10 09:32 GMT
  • இல்லத்தின் முதல் மாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளன.
  • இல்லத்தின் முன்பு அனைவரும் கலந்துரையாடி பேசுவதற்காக இருக்கைகள் போடப்பட உள்ளன.

தஞ்சாவூர்:

தஞ்சை மானம்பு சாவடியில் உள்ள வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மாநகராட்சி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உலக வீடற்றோர் தின விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார்.

வீடற்றோர் தினத்தை முன்னிட்டு அங்குசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வீடற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள முதியவர்கள், ஆதரவற்றவர்களிடம் மேயர் சண் ராமநாதன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உங்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும். ஏதாவது குறைகள் கூறினால் உடனுக்குடன் அது சரி செய்யப்படும்.

இந்த இல்லத்தின் முதல் மாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளன. மேலும் பூங்கா அமைய உள்ளது.

இல்லத்தின் முன்பு நீங்கள் அனைவரும் கலந்துரையாடி பேசுவதற்காக இருக்கைகள் போடப்பட உள்ளன.

வருகிற தீபாவளி பண்டிகை அன்று நான் உங்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News