உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் -வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ்நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் - நெல்லை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-11-17 09:19 GMT   |   Update On 2022-11-17 09:19 GMT
  • நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாக குழு கூட்டம் டவுனில் நடைபெற்றது
  • தென்காசி, நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை:

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாக குழு கூட்டம் டவுனில் நடைபெற்றது. தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் முகமது ஹனிபா, கான்முகமது, நாராயணன், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சந்தி பிள்ளையார் கோவில், காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் சாலை அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது, வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி, நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News