உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் வேளாண்மை சந்தையில் அதிகாரிகள் அலட்சியம்

Published On 2023-03-24 13:38 IST   |   Update On 2023-03-24 13:38:00 IST
  • செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடைபெறும்
  • கடந்த மாதம் வரை மாலை 3 மணிக்கு விலை நிலவரம் தெரிந்து விடும்

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்க மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தை யில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடைபெறுகிறது.நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். தாங்கள் கொண்டு வந்த பருப்புக ளுக்கு ஏலத் தொகை நில வரம் குறித்து இரவு 8 மணி வரை தெரியாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில வாரங்களாக தேங்காய் பருப்பு ஏலம் விலை நிலவரம் குறித்து எங்களுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்து வதில்லை. கடந்த மாதம் வரை மாலை 3 மணிக்கு விலை நிலவரம் தெரிந்து விடும். தற்போது அங்கு பணியில் இருக்கும் ஊழி யர்கள் மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றவு டன் விலை நிலவரத்தை அறிவிக்கின்றனர்.கடந்த மாதம் வரை அறிவித்தது போல் மாலை அலுவலகத்திலேயே விலை நிலவரத்தை அறிவிக்க வேண்டும். வியாபாரி களுக்கு சாதகமாக அதி காரிகள் செயல்படுகிறார்க ளோ என சந்தேகம் எழுந்துள்ளது.மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News