உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Published On 2022-09-07 06:25 IST   |   Update On 2022-09-07 06:25:00 IST
  • சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதால், நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது.
  • மாணவர்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யலாம்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் கால தாமதம் ஆனது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ந் தேதி வெளியாகும்.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். 

Tags:    

Similar News