உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே நூதன முறையில் மளிகை கடையில் திருடிய பலே திருடன் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்

Published On 2022-08-26 09:16 GMT   |   Update On 2022-08-26 09:16 GMT
  • ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து எனக்கு தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டான்.
  • முருகன் வீட்டில் சென்று தண்ணீரை கொண்டு வருவதற்குள் அந்த வாலிபர் கடையில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்றான்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்உள்ள சுந்தர மேடுபகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் வீட்டின் முன்புறம் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து எனக்கு தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டான். உடனே முருகன் வீட்டில் சென்று தண்ணீரை கொண்டு வருவதற்குள் அந்த வாலிபர் கடையில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்றான். இதை பார்த்த முருகன் திருடன் திருடன் கூச்சலிட்டார்.

உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவனைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் அவர் ஒடுவன் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்த பாவாடை (வயது 32) என்பதும் இவர் மீது விழு ப்புரம் மேற்கு போலீஸ் நிலையம் மற்றும் காணை போலீஸ் நிலை யத்திலும் பல்வேறு திருட்டு வழக்கு கள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பகல் நேரத்தில் மளிகை கடையில் நூதனமான முறையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது அந்த பகு தியில் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

Tags:    

Similar News