உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளியில் வேளாண்மை துறை சார்பில் தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
ஊத்தங்கரை அருகே தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
- 170 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை உதவி வேளாண்மை அலுவலர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
மத்தூர்,
ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளியில் வேளாண்மை துறை சார்பில் விவசாகு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்சியில் ஊத்தங்கரை உதவி வேளாண்மை அலுவலர் நந்தகுமார் தலைமையில், விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்க மாநில துணைத் தலைவர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, 170 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
இதில் விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் அருள், மாவட்ட பொருளாளர் அண்ணாமலை,மாவட்ட துணைத்தலைவர் தீர்த்தகிரி,மாவட்டச் செயலாளர் ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.