உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே உள்ள பொம்மதாசம்பட்டியில் காட்டாற்று வெள்ளம் தரை பாலத்தை மூழ்கடித்து செல்வத்தையும், ஆபத்தை உணராமல் பொது மக்கள் கடந்து செல்வதையும் காணலாம்.

ஊத்தங்கரை அருகே தரை பாலத்தை மூழ்கடித்து செல்லும் மழை நீர்

Published On 2022-10-17 09:43 GMT   |   Update On 2022-10-17 09:43 GMT
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • தரைபால பணியை விரை ந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து உள்ள பொம்மதாசம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமம் அருகே பொதுமக்கள் செல்லும் சாலை குறுக்கே சிங்காரப் பேட்டை பெரிய ஏரியின் உபரிநீர் செல்லும் பாதையில் ஒரு சிறிய தரை பாலத்தை பயன்படுத்தி அருகே உள்ள நகர்புறங்களுக்கும், மருத்துவ பயன்பாட்டிற்கு செல்லவும், பள்ளி கல்லூரிக்கு செல்லவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தரைப்பாலம் பழுதானது. பொதுபணி துறையினர் சார்பில் பாலம் சரிசெய்யும் பணி தாமதமாக நடந்து வந்ததால், நேற்று இரவு பேய்த மழையில் ஏரி உபரிநீர் அதிகளவில் வெளியேறி பாலத்தை மூழ்கடித்து செல்கிறது.எனவே உடனடியாக தரைபால பணியை விரை ந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் ஆபத்தை உணராத மாணவர்கள் மழைநீர் பாதையில் செல்பி எடுத்து செல்வது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.

Tags:    

Similar News