உள்ளூர் செய்திகள்

 ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பாற்று அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோபுர கலசத்திற்கு புனித நீருற்றி சிறப்பு செய்த சிவாச்சாரியர்கள்.

ஊத்தங்கரை அருகே பாம்பாற்று அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-06-28 09:07 GMT   |   Update On 2022-06-28 09:07 GMT
  • அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் உள்ள ஸ்ரீ பாம்பாற்று அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

பார்வதியின் மறு உருவாக்கம் திருவருளாக்கம், அகண்ட அண்டம் என பல வடிவங்களில் ஒன்றான பாம்பாற்று அம்மனின் திருக்கோவில் புனரமைப்பு நடைபெற்று அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கணபதி வழிபாடு, கோ பூஜை, சிறப்பு யாக வேள்விகள் செய்து அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை கலசங்களில் நிரப்பி பூஜைகள் செய்து ,வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் புண்ணிய தீர்த்தம் தெளிக்கபட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News