உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் வெளிநாட்டு பணம்,தங்கநகை திருட்டு
- ஊத்தங்கரை அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- வெளிநாட்டு பணம், நகையை திருடி சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(60). இவர் மின்சார பைக் தயாரிப்பு நிறுவனத்தில் மானேஜராக உள்ளார்.
கடந்த மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ.3000 ரொக்கம். 1 பவுன் தங்க நகை முதலியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ரமேஷ் தந்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகிறார்.