பேரிகை அருகேதோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
- பேரிகை அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் போலீசார் கைது செய்தனர்.
- பேரிகை பகுதியில் கஞ்சா செடிகளை விவசாய நிலத்தில் வளர்த்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
ஓசூர்,
பேரிகை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூளகிரி தாலுகா அத்திமுகம் அருகே கெரிகேப்பள்ளி என்னும் ஊரில் நரசிம்மப்பா (43) என்பவர் கஞ்சா செடிகளை விவசாய நிலத்தில் வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது 2.64 கிலோ கடை கொண்ட 3கஞ்சா செடிகள் பயிரிட்டிருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். அதை பறிமுதல் செய்த போலீசார், அதை பயிரிட்டதாக நரசிம்மப்பாவை கைது செய்தனர்.
ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு சப்&இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒருவரை சோதனை செய்த போது அவர் 3 கிலோ கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது. அதை வைத்திருந்ததாக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ராகவா (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.