உள்ளூர் செய்திகள்
சிங்காரப்பேட்டை அருகே போதையில் ஏரியில் விழுந்த தொழிலாளி மூழ்கி சாவு
- கடந்த 21-ந்தேதி போதையில் தள்ளாடியபடி சென்ற குமார் அதே பகுதியில் உள்ள பூசாரிக்கவுண்டனூர் ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
- இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
கடந்த 21-ந்தேதி போதையில் தள்ளாடியபடி சென்ற குமார் அதே பகுதியில் உள்ள பூசாரிக்கவுண்டனூர் ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
சுய நினைவு இல்லாத நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து குமாரின் மனைவி மீனாட்சி சிங்காரப்பேட்டை போலீசில் புகார் தந்தார்.
புகாரின்பேரில் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.