உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை அருகே பால் வண்டி மோதி வாலிபர் பலி

Published On 2022-09-23 15:14 IST   |   Update On 2022-09-23 15:14:00 IST
  • மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையிலிருந்து தொட்டி நாய்க்கனஅள்ளி நோக்கி நேற்று மாலை சாலையில் சென்றனர்.
  • வேன் குட்டூர் பிரிவு பாதை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த கொப்பகரை ஊராட்சி தொட்டி நாய்க்கனஅள்ளியை சேர்ந்த சின்னப்பன் மகன் மூர்த்தி (வயது 21). அதே ஊரை சேர்ந்த அரிசந்திரன் மகன் அரிகிருஷ்ணன் (19).

இவர்கள் இருவரும் மூர்த்தியின் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையிலிருந்து தொட்டி நாய்க்கனஅள்ளி நோக்கி நேற்று மாலை சாலையில் சென்றனர். அப்போது உலகம் கிராமத்திலிருந்து பால் ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை நோக்கி வந்த வேன் குட்டூர் பிரிவு பாதை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மூர்த்தி சம்பவ இடத்திலே பலியானார். பின்னால் உட்கார்ந்து வந்த அரிகிருஷ்ணன் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார்.

இது தொடர்பாக சின்னப்பன் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரனை செய்து வருகிறார்.

Tags:    

Similar News