உள்ளூர் செய்திகள்
பர்கூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார்
- பல்வேறு இடங்களிலும் அந்த இளம்பெண் குறித்து விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
- செல்வம் (வயது 24) என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் பர்கூர் அருகேயுள்ள அஞ்சநாயக்கன்பள்ளி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 15-ந்தேதி முதல் அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.பல்வேறு இடங்களிலும் அந்த இளம்பெண் குறித்து விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திரு வண்ணாமலை மாவட்டம் ஸ்ரீவலம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 24) என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த மாணவியின் தாய் தந்த புகாரின்பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியையும் அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.