உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளி அருகே கோவிலில் திடீரென வாகன நிறுத்த கட்டணம் வசூல்

Published On 2022-12-26 09:49 GMT   |   Update On 2022-12-26 09:49 GMT
  • வாகனங்களுக்கு திடீரென கட்டணம் வசூலிக்க ப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இந்த தொகை கோவிலின் வளர்ச்சிக்காகவும், சுற்றுசூழல் பாதுகாப்பு செலவுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள முத்தம்பட்டியில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் உள்ளது.

இங்கு விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கா னா,உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் பஸ்கள், வேன்கள் மூலம் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள்.

இந்நிலையில் இந்த கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு திடீரென கட்டணம் வசூலிக்க ப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இருசக்கர வாகனங்க ளுக்கு ரூ.20, கார்களுக்கு ரூ.50, வேன்கள், பஸ்கள் ஆகியவற்றுக்கு ரூ.100 என்று நிறுத்த கட்டணம் வசூலிக்கின்றனர்.

இது குறித்து இக்கோவிலின் பலவருட பக்தர்கள் சிலர் கூறுகையில் 10 வருடங்களுக்கு மேலாக இந்த கோவிலில் வந்து அனுமனை வழிபட்டு செல்கிறோம்.

இதுவரை இவ்வாறு வாகனங்களுக்கு நிறுத்த கட்டணம் வசூலித்தது இல்லை.இப்போது புதிதாக வசூல் செய்கின்றனர்.

ஆனால் இந்த கோவிலு க்கென்று பிரத்தியேகமாக வாகன நிறுத்தும் இடங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வனத்துறை ஏற்பாட்டின்படிதான் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அந்த பொறுப்பை கிராம நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தொகை கோவிலின் வளர்ச்சிக்காகவும், சுற்றுசூழல் பாதுகாப்பு செலவுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பது பக்தர்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News