உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
- பள்ளி மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- ராஜேந்திரனை போக்சோவில் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜேந்திரன் (வயது29). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது பற்றி அந்த அந்த மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.