மத்தூர் போலீஸ் நிலையத்தில் மாற்று திறனாளிகளின் சங்கத்தினர் புகார் தர வந்த போது எடுத்த படம்.
மத்தூர் அருகே மாற்றுத்தினாளியை தாக்கிய கும்பல்
- இருவருக்கும் தனிதனியாக நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார்.
- பெரியசாமியை விவசாய பணிகளை செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது45). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரது சகோதரர் மதன் (60).
இவர்களது தந்ைத இவர்கள் இருவருக்கும் தனிதனியாக நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14-ந்ேததி பெரியசாமி தனது விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த போது, அங்கு வந்த மதன், மதனின் மருமகன்களான சின்னசாமி, சுரேஷ், மற்றும் உறவினர் சின்னதுரை ஆகிய நான்கு பேரும் பெரியசாமியை விவசாய பணிகளை செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் குருடு என ஊனத்தை ஏளனம் செய்து பேசியதால், மனமுடைந்த பெரியசாமி மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் பெரியசாமியின் சகோதரர் மதன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ், சின்னசாமி, சின்னதுரை ஆகிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பெரியசாமிக்கு ஆதரவாக நேற்று மாலை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டு புகார் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.