உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் திருடிய வெளிமாநில ஆசாமி கைது
- முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி பீரோவையும் உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருடியுள்ளான்.
- அதே பகுதியில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்தவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகனூர் பகுதியை சேர்ந்தவர் குரியன் மேத்யூ (40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். கடந்த 18-ந்தேதி இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி பீரோவையும் உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.29,000 பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.
இது குறித்து குரியன் பாகனூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்துவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாதிக் உசேன் லக்கர் (29) என்பவர்தான் குரியன் வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.