உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே ரூ.33.42 லட்சத்தில் புதிய தார் சாலை

Published On 2022-07-04 10:04 GMT   |   Update On 2022-07-04 10:04 GMT
  • 33.42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
  • அசோக்குமார் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சி தாசரப்பள்ளி-கும்மனூர் சாலை முதல் ஜிஞ்சுப்பள்ளி வரை 1500 மீட்டர் தொலைவிற்கு 33.42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கண்ணியப்பன் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

அப்போது எம்.எல்.ஏ.,விடம், கும்மனூர்-கூலியம் இடையில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். பெரிய கும்மனூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

விரைவில் நிதி ஒதுக்கி இந்த இரண்டு பணிகளையும் முடித்துக் கொடுப்பதாகவும், கும்மனூரில் அங்கன்வாடி கட்டடம் கட்ட 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, சோக்காடி ஊராட்சி மன்ற தலைவர் கொடிலா ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் சரவணன், முன்னாள் தலைவர் ராஜாராவ், கிளை செயலாளர்கள் வேடியப்பன், மதன்குமார், ரமேஷ், கவுன்சிலர்கள் ஜெயராமன், ரமேஷ், கூட்டுறவு வங்கித் தலைவர் சூர்யா, தாபா வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் இந்திராணி மகாதேவன், கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், காட்டிநா யனப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் நாராயண குமார், கார்த்திக் பால்ராஜ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News