உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா செடி வளர்த்து விற்ற 2 பேர் கைது

Published On 2022-07-03 14:51 IST   |   Update On 2022-07-03 14:51:00 IST
  • வீட்டில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அளித்தனர்.
  • போலீசார் சஞ்சய்யை கைது செய்து அவரிடமிருந்து ரூ.3,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்துள்ள உத்தனஹள்ளி போலீஸ் சரகம் பண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(57).

இவர் தனது வீட்டுக்கு பின்புறம் கஞ்சா செடி வளர்த்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அளித்தனர். அர்ஜுனனிடம் ரூ.8,000 மதிப்பிலான கஞ்சாவை பாய்முதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல பர்கூர் போலீஸ் சரகம் ஜெகதேவி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய்(17) என்பவரும் தனது வீட்டு தோட்டத்திலேயே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார்.

அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு கஞ்சா செடிகளை அளித்த பாரஃபூர் போலீசார் சஞ்சய்யை கைது செய்து அவரிடமிருந்து ரூ.3,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News