உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

Update: 2022-06-25 08:47 GMT
  • கிருஷ்ணகிரி பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
  • வேலை கிடைக்காத விரக்தியில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசில் கிராம நிர்வாக அதிகாரி பாக்கியராஜ்(41) என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில் செட்டிபள்ளி கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் யார் என்று விசாரணைநடத்தியபோது செட்டிபள்ளியை சேர்ந்த சின்ராஜ் என்பதும், பி.இ. பட்டதாரியான அவர் தகுந்த வேலை கிடைக்காததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News